< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
துபாயில் இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
|1 Dec 2023 6:32 PM IST
இலங்கை அதிபருடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
துபாய்,
சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச அளவில் இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து துபாயில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டின் அமர்வுகளுக்கு மத்தியில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அவர்களைச் சந்தித்தேன். பல்வேறு விடயங்கள் தொடர்பாக இணைந்து கலந்துரையாடுவது எப்பொழுதுமே அற்புதமானது" என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.