லாவோஸ் நாட்டுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு
|லாவோஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வியன்டியன்,
21-வது ஆசியன்-இந்தியா மற்றும் 19-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி லாவோஸ் நாட்டுக்கு சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆசியான்-இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில் வருகிற 11-ந்தேதி நடக்கிறது. இதைப்போல கிழக்கு ஆசியா அமைப்பின் 19-வது உச்சி மாநாடும் அங்கு நடைபெறுகிறது.
இந்த மாநாடுகளில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அந்த நாட்டு பிரதமர் சோனக்சய் சிபன்டோன் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று பிரதமர் மோடி இந்த மாநாடுகளில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாடுகளுக்கு இடையே உறுப்பு நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
லாவோஸ் சென்றடைந்த பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், லாவோ பிடிஆரில் கிடைத்த வரவேற்பு மறக்கமுடியாதது! இந்திய சமூகம் அவர்களின் வேர்களுடன் தெளிவாக இணைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் இந்தியில் பேசுவதும், பிஹு நடனம் செய்வதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.