< Back
உலக செய்திகள்
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு எகிப்து சென்றடைந்தார் பிரதமர் மோடி
உலக செய்திகள்

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு எகிப்து சென்றடைந்தார் பிரதமர் மோடி

தினத்தந்தி
|
24 Jun 2023 7:27 PM IST

இந்திய பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு எகிப்து சென்றடைந்தார்.

கெய்ரோ,

இந்திய பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக கடந்த 20-ம் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த பயணத்தின் போது இந்திய - அமெரிக்க பெரு நிறுவனங்களின் தலைவர்கள், தொழிலதிபர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அமெரிக்க அரசு விருந்தும் வழங்கப்பட்டது. 4 நாள் அரசு முறை பயணத்தை முடித்த பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து எகிப்து புறப்பட்டார்.

இந்நிலையில், 4 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று எகிப்து சென்றடைந்தார். 2 நாள் பயணமாக பிரதமர் மோடி எகிப்து சென்றுள்ளார். கெய்ரோ விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை எகிப்து பிரதமர் முஷ்தபா மட்டவுலி நேரில் சென்று வரவேற்றார்.

இந்திய பிரதமர் அரசு முறை பயணமாக எகிப்து செல்வது 26 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். எகிப்து சென்றுள்ள பிரதமர் மோடி நாளை அந்நாட்டு அதிபர் அப்துல் பஹத் எல் சிசியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது வர்த்தகம் உள்பட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தக உள்ளது.

மேலும் செய்திகள்