< Back
உலக செய்திகள்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
உலக செய்திகள்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தினத்தந்தி
|
24 Sept 2024 8:56 AM IST

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார்.

வாஷிங்டன்,

பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். இந்த பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த பிரதமர் மோடி குவாட் உச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து பயணத்தின் கடைசி நாளான நேற்று பிரதமர் மோடி ஐ.நா. சபையில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியா தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கியிடம் மோடி உறுதியளித்தார். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்