< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
புகழ்பெற்ற எகிப்திய எழுத்தாளருடன் பிரதமர் மோடி சந்திப்பு....!!
|25 Jun 2023 4:03 PM IST
பிரதமர் நரேந்திர மோடியை கெய்ரோவில் புகழ்பெற்ற எகிப்திய எழுத்தாளரும் பெட்ரோலிய நிபுணருமான தாரெக் ஹெக்கி சந்தித்தார்.
புதுதில்லி,
பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து நாட்டுக்கு சென்றார். எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல்சிசி அழைப்பின் பேரில் அரசு முறை பயணத்தை மேற்கொண்டார்.பிரதமர் மோடி எகிப்தின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியை கெய்ரோவில் புகழ்பெற்ற எகிப்திய எழுத்தாளரும் பெட்ரோலிய நிபுணருமான தாரெக் ஹெக்கி சந்தித்தார். உலகளாவிய புவிசார் அரசியல், எரிசக்தி பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான அம்சங்கள் குறித்து இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.