< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்காவில் விமான விபத்து- 5 பேர் பலி
|11 March 2024 2:19 PM IST
ஓடுபாதையில் அவசரமாக தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம், மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம், ஹாட் ஸ்பிரிங்ஸ் நகரின் இங்கல்ஸ் பீல்டு விமான நிலையம் அருகே சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. ஓடுபாதையில் அவசரமாக தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம் மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பிடித்தது. இதில், விமானத்தில் இருந்த குழந்தை உள்ளிட்ட 5 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
விர்ஜீனியாவின் மேற்கு எல்லைக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து தொடர்பாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.