< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பசிபிக் பெருங்கடல் அருகே விமான விபத்து... தேடும் பணி தீவிரம்...!
|15 Jan 2024 9:42 PM IST
கலிபோர்னியாவில் ஹாப் மூன் விரிகுடா அருகே இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சான் பிரான்சிஸ்கோ,
பசிபிக் பெருங்கடல் அருகே விபத்துக்குள்ளான விமானத்தை மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நேற்று இரவு 7.15 மணியளவில் கலிபோர்னியாவில் ஹாப் மூன் விரிகுடா அருகே இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஹாப் மூன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில மணிநேரங்களில் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு தீயணைப்பு துறை உள்ளிட்ட மீட்புக்குழுக்கள் விரைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்கள் குறித்தும் அது என்ன வகையான விமானம் என்பது குறித்தும் எந்த தகவல்களும் வெளியாகவில்லை.