< Back
உலக செய்திகள்
போலந்தில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து 5 பேர் பலி
உலக செய்திகள்

போலந்தில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து 5 பேர் பலி

தினத்தந்தி
|
19 July 2023 1:26 AM IST

போலந்து நாட்டில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து 5 பேர் பலியாகினர்.

வார்சா,

ஐரோப்பிய நாடான போலந்தின் மத்திய பகுதியில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அங்கு மோசமான வானிலை நிலவியதால் விமானம் பறப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கிரிசினோ பகுதியில் அவசரமாக விமானத்தை தரையிறக்க விமானி முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்