< Back
உலக செய்திகள்
பிலிப்பைன்ஸ்: சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது லாரி மோதி விபத்து -  8 பேர் பலி
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ்: சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது லாரி மோதி விபத்து - 8 பேர் பலி

தினத்தந்தி
|
2 Aug 2022 5:07 AM IST

பிலிப்பைன்சில் சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள படங்காஸ் மாகாணம் நசுகுபு நகரில் குப்பை லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

அப்போது அந்த லாரி சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. அதன் பின்னரும் நிற்காமல் ஓடிய லாரி எதிர் திசையில் வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு, பின்னர் ஒரு காரின் மீது மோதி நின்றது.

இந்த கோர விபத்தில் பழ வியாபாரி, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் மற்றும் காரில் இருந்த 6 பேர் என மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்