< Back
உலக செய்திகள்
பிலிப்பைன்ஸ்: சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 15 பேர் பலி
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ்: சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 15 பேர் பலி

தினத்தந்தி
|
23 Feb 2024 9:46 AM IST

படுகாயம் அடைந்த சிலருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

மணிலா,

பிலிப்பைன்சின் நீக்ரோஸ் ஒரியண்டல் மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. மபினாய் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் உள்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த சிலருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்