< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பிலிப்பைன்சில் மோதல்.. கிளர்ச்சியாளர்கள் 7 பேரை சுட்டுக் கொன்றது ராணுவம்
|27 Jun 2024 1:22 PM IST
மோதலில் ராணுவம் தரப்பில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிலா:
பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் உள்ள நியூவா எசிஜா மாகாணத்தில் நடந்த மோதலில் கிளர்ச்சிக் குழுவினர் 7 பேரை ராணுவம் சுட்டுக்கொன்றது.
பாண்டபங்கன் நகரில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் புதிய மக்கள் ராணுவம் என்ற கிளர்ச்சிக் குழுவிற்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக ராணுவம் கூறி உள்ளது. இந்த மோதலில் ராணுவம் தரப்பில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.