< Back
உலக செய்திகள்
பிலிப்பைன்ஸ்: நடுக்கடலில் படகில் பயங்கர தீ விபத்து - 120 பேரின் நிலை என்ன?
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ்: நடுக்கடலில் படகில் பயங்கர தீ விபத்து - 120 பேரின் நிலை என்ன?

தினத்தந்தி
|
18 Jun 2023 11:34 AM IST

பிலிப்பைன்சில் நடுக்கடலில் படகில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டின் சிக்யூஜொர் மாகாணத்தில் இருந்து பொஹல் மாகாணத்திற்கு இன்று பயணிகள் படகு சென்றுகொண்டிருந்தது. அந்த படகில் 120-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது படகில் திடீரென தீ பிடித்தது. தீ மளமளவென படகு முழுவதும் பரவியது. இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தங்கள் உயிரை காப்பாற்ற முயற்சித்தனர்.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் படகில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 120 பேர் பயணித்த படகில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்