< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பாகிஸ்தானில் மீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை.!
|17 Aug 2023 2:47 PM IST
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
கராச்சி,
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி இருந்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.290-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.293-க்கும் விற்கப்படுகிறது. அங்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.40 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.