பெரு: இளம்பெண்ணை பணிக்கு அமர்த்தியதில் ஊழல்; பிரதமர் ராஜினாமா
|அதிபர் டினா பொலுவார்தேவுடன் பேசிய பின்னரே, பிரதமர் பதவியில் இருந்து விலகும் முடிவை நான் எடுத்தேன் என ஆல்பர்டோ கூறினார்.
லிமா,
பெரு நாட்டின் பிரதமர் பதவியை வகித்து வந்த ஆல்பர்டோ ஒடரோலா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இளம்பெண் ஒருவரை சட்டவிரோத வகையில், பொது துறை சார்ந்த பணியில் அமர்த்திய குற்றச்சாட்டை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக குரலெழுப்பின.
இதுபற்றிய ஆடியோ ஒன்றும் வெளிவந்தது. இதனை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து விலகும் முடிவை ஆல்பர்டோ அறிவித்து உள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அதிபர் டினா பொலுவார்தேவுடன் பேசிய பின்னரே, பிரதமர் பதவியில் இருந்து விலகும் முடிவை நான் எடுத்தேன் என கூறினார்.
அரசியல் எதிரிகளின் அச்சுறுத்தல் தன்னை ஒன்றும் செய்யாது என்றும் கூறினார். பதவி விலகல் முடிவை பற்றி அவர் குறிப்பிடும்போது, அதில் 2 விசயங்கள் உள்ளன. ஒன்று, மந்திரிசபையை மீண்டும் மாற்றியமைக்க அதிபருக்கு கவலை இல்லாமல் இருக்க வேண்டும் என்பது ஆகும். 2-வது, அதிபர் அவராகவே தொடர்ந்து அவருடைய வேலையை செய்ய அனுமதிப்பது ஆகும் என கூறியுள்ளார்.