< Back
உலக செய்திகள்
ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு இன்புளூயன்சா தடுப்பூசி போட பெற்றோர் வலியுறுத்தல்
உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு இன்புளூயன்சா தடுப்பூசி போட பெற்றோர் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
1 July 2023 4:37 PM GMT

ஆஸ்திரேலியாவில் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போட பெற்றோர் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

சிறுவர்கள் மற்றும் முதியவர்களை வெகுவாக பாதிக்கும் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அரசாங்கம் இலவச தடுப்பூசி செலுத்தி வருகிறது.

இந்தநிலையில் கடந்த மே மாதம் தற்போது வரை இன்புளூயன்சா தொற்றால் 8 சிறுவர்கள் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிலருக்கு தீவிர காய்ச்சல், நரம்பியல் மற்றும் தசை தொடர்பான பாதிப்புகளும் ஏற்பட்டது. இதனால் பயந்து போன பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு இன்புளூயன்சா நோய்க்கு எதிரான தடுப்பூசி போட வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்