< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்காவில் சுழன்றடித்த சூறாவளிக் காற்றால் மக்கள் பீதி - தானிய களஞ்சியம் கடும் சேதம்
|5 Jan 2023 11:34 PM IST
மத்திய இல்லினாய்ஸ் பகுதியில் 6 சூறாவளி சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் மத்திய இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள மேகன் கவுண்ட்டி பகுதியில் சூறாவளிக் காற்று வீசியது. அங்குள்ள காற்றாலைகளின் அருகே சூறைக்காற்று மையம் கொண்டு வீசியதால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.
மத்திய இல்லினாய்ஸ் பகுதியில் 6 சூறாவளி சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக அந்நாட்டின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில் மேகன் கவுண்ட்டி பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றால் அங்கிருந்த தானிய களஞ்சியம் கடுமையாக சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.