< Back
உலக செய்திகள்
இஸ்ரேஸ் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் பலி

கோப்புப்படம்

உலக செய்திகள்

இஸ்ரேஸ் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் பலி

தினத்தந்தி
|
29 Sept 2022 11:53 PM IST

இஸ்ரேஸ் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெருசலேம்,

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் பயங்கரவாதிகள் எனக் கூறப்படுபவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

பலியானவர்களில் டெல் அவிவ் நகரில் நடந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான ஒருவரின் சகோதரரும் உள்ளடங்குவதாக இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த தாக்குதலில் 40 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள ஜெனின் நகரில் இஸ்ரேல் படைகள் சோதனை நடத்த சென்ற போது, வெடிகுண்டு வெடித்தது. அதனை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதனை கண்டித்து அப்பகுதியில் பொது வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்திற்கு உள்ளூர் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்