< Back
உலக செய்திகள்
காசாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40,265-ஆக உயா்வு
உலக செய்திகள்

காசாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40,265-ஆக உயா்வு

தினத்தந்தி
|
23 Aug 2024 3:42 AM IST

ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.

காசா,

இஸ்ரேல்-காசா போர் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். எனவே இந்த போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் காசாவில் பதுங்கி இருக்கும் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40,265-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

டேயிா் அல்-பாலா, கான் யூனிஸ் ஆகிய தெற்குப் பகுதி நகரங்களில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த நள்ளிரவிலிருந்து அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 22 போ் உயிரிழந்தனா். இத்துடன், காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த 10 மாதங்களுக்கும் மேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40,265-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 93,144 போ் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் செய்திகள்