< Back
உலக செய்திகள்
காசாவில் பாலஸ்தீனியர்கள் இறப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது
உலக செய்திகள்

காசாவில் பாலஸ்தீனியர்கள் இறப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது

தினத்தந்தி
|
29 Feb 2024 5:15 PM IST

இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கி 5 மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில் காசாவில் 70,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர்.

காசா,

காசா முனையை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் படைகள்- ஹமாஸ் அமைப்பினர் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்தாலும், கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி அன்று தெற்கு இஸ்ரேலிய எல்லையில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கி 5 மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில் காசாவில் பலியாகிய பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக பாலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன.

காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 30,000ஐத் தாண்டியதாகவும் 70,000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் விளைவாக ஏரளாமானவர்கள் கொல்லப்பட்டு காசா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலிய எல்லையில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது.

மேலும் செய்திகள்