< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இந்திய டி.வி. சேனல்களை ஒளிபரப்பக்கூடாது - பாகிஸ்தான் அரசாங்கம் எச்சரிக்கை
|23 April 2023 2:22 AM IST
இந்திய டி.வி. சேனல்களை ஒளிபரப்பக்கூடாது என பாகிஸ்தான் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாபி மாகாணங்களில் தடை உத்தரவை மீறி இந்திய டெலிவிஷன் சேனல்கள் ஒளிபரப்பப்படுவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. அதன்பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதில் அரசின் உத்தரவை மீறியது தெரிய வந்தது. இதனையடுத்து இந்திய சேனல்களை ஒளிபரப்புவதை நிறுத்துமாறும், மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.