< Back
உலக செய்திகள்
சட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றம் - பாகிஸ்தான் அரசாங்கம் முடிவு
உலக செய்திகள்

சட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றம் - பாகிஸ்தான் அரசாங்கம் முடிவு

தினத்தந்தி
|
7 Oct 2023 11:10 PM IST

சட்ட விரோதமாக பாகிஸ்தானில் குடியேறி உள்ள அனைவரும் வருகிற 31-ந்தேதிக்குள் வெளியேற வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கூறினார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அப்போது ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடியேறினர். அந்தவகையில் பாகிஸ்தானில் மட்டும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 17 லட்சம் அகதிகள் வசிப்பதாக கூறப்படுகிறது. இதனால் புலம் பெயர்ந்தோர் பிரச்சினை குறித்து ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக விவாதித்து வருகிறது. எனினும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்தநிலையில் சட்ட விரோதமாக பாகிஸ்தானில் குடியேறி உள்ள அனைவரும் வருகிற 31-ந்தேதிக்குள் வெளியேற வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி முதல் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஜலீல் அப்பாஸ் ஜிலானி கூறினார். பாகிஸ்தான் அரசின் இந்த முடிவுக்கு ஆப்கானிஸ்தானின் தலீபான் அரசாங்கம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்