< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
நவீன ஏவுகணை சோதனை நடத்திய பாகிஸ்தான்..!!
|25 Oct 2023 4:22 AM IST
நவீன பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை பாகிஸ்தான் ராணுவம் வெற்றிகரமாக செய்து முடித்தது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக தனது ராணுவத்தின் திறனை அரசாங்கம் வலுப்படுத்தி வருகிறது. இதற்காக பாகிஸ்தானின் நவீன ராணுவ மயமாக்கல் திட்டத்துக்கு சீனா பல்வேறு உதவிகளை செய்கின்றது. அதன்படி சக்திவாய்ந்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கிய சீனாவை சேர்ந்த 3 நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடந்த வாரம் பொருளாதார தடை விதித்திருந்தது.
இந்தநிலையில் நேற்று நவீன பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை பாகிஸ்தான் ராணுவம் வெற்றிகரமாக செய்து முடித்தது. இது ராணுவத்தின் திறன் மற்றும் தொழில்நுட்பங்களை சோதனை செய்வதை நோக்கமாக கொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்தது. எனவே இந்த சோதனையை வெற்றிகரமாக முடித்த விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி, இடைக்கால பிரதமர் அன்வாருல் ஹக் கக்கர் ஆகியோர் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.