< Back
உலக செய்திகள்
பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை வழங்கும் பாகிஸ்தான்  - ஐ.நா.வில் இந்தியா கண்டனம்
உலக செய்திகள்

பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை வழங்கும் பாகிஸ்தான் - ஐ.நா.வில் இந்தியா கண்டனம்

தினத்தந்தி
|
23 Feb 2023 11:26 PM GMT

பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை பாகிஸ்தான் வழங்கி வருவதாக ஐ.நா.வுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா,

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, அவர்களுக்கு பாதுகாப்பினை வழங்கும் மற்றும் தண்டனையின்றி அதைச் செய்யும் ஒரு நாடாக பாகிஸ்தான் உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "இரண்டு நாட்கள் தீவிரமான விவாதங்களுக்குப் பிறகு, மோதல் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரே பாதை சமாதானப் பாதைதான் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொண்ட நேரத்தில், இத்தகைய விரும்பத்தகாத ஆத்திரமூட்டல் சம்பவங்கள் வருந்தத்தக்கது. இது நிச்சயமாக தவறானது.

பாகிஸ்தானின் பிரதிநிதிக்கு நாங்கள் வழங்கும் அறிவுரை என்னவென்றால், கடந்த காலத்தில் நாங்கள் பயன்படுத்திய ஏராளமான சம்பவங்களை கூறலாம். ஐநா சாசனத்தின் கொள்கைகளை இந்தியா நிலைநிறுத்துகிறது, நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மட்டுமே ஒரே வழி என்று கூறுவோம்" என்று அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை உக்ரைனில் விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை அடைவதன் அவசியம் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியது. தீர்மானத்திற்கு ஆதரவாக 141 உறுப்பினர்களும், எதிர்த்து 7 பேரும் வாக்களித்தனர். சீனா, இந்தியா உள்பட 32 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.

இதுதொடர்பாக பேசிய இந்திய தூதர், "இன்றைய தீர்மானத்தின் குறிப்பிடப்பட்ட நோக்கங்களை நாம் கவனத்தில் கொள்ளும்போது, நிலையான அமைதியைப் பாதுகாப்பதற்கான எங்கள் இலக்கை அடைவதில் அதன் வரம்புகளைக் கருத்தில் கொண்டு, நாங்கள் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்