< Back
உலக செய்திகள்
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி பெரிய தொழில்களுக்கு சூப்பர் வரி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அறிவிப்பு
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி பெரிய தொழில்களுக்கு 'சூப்பர் வரி' பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அறிவிப்பு

தினத்தந்தி
|
24 Jun 2022 11:23 PM IST

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.அந்த நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாடு திவாலாகும் நிலைக்கு செல்வதை தடுக்கவும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் சிமெண்டு, இரும்பு மற்றும் ஆட்டோமொபைல் போன்ற பெரிய அளவிலான தொழில்களுக்கு 10 சதவீதம் 'சூப்பர் வரி' விதிக்கப்படுவதாக அந்த நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "எங்கள் முதல் நோக்கம் வெகுஜனங்களுக்கு நிவாரணம் வழங்குவதும், மக்கள் மீதான பணவீக்க சுமையை குறைத்து அவர்களுக்கு வசதி செய்வதும் ஆகும். எங்கள் இரண்டாவது நோக்கம் திவாலாகிவிடாமல் நாட்டைப் பாதுகாப்பதாகும். அதன் ஒரு பகுதியாக நாட்டில் பெரிய அளவிலான தொழில்களுக்கு 10 சதவீதம் 'சூப்பர் வரி' விதிக்கப்படுகிறது. இதில் பொருளாதாரத்தை பலப்படுத்துவது உள்ளிட்ட பிற நோக்கங்களும் அடங்கும்" என கூறினார்.

மேலும் செய்திகள்