< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பாகிஸ்தான் இடைத்தேர்தல்: இம்ரான்கான் கட்சி அபார வெற்றி
|18 July 2022 3:56 AM IST
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சட்டசபை இடைத்தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சட்டசபை இடைத்தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்து,
வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெளியானது. இந்நிலையில், சட்டசபை இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி 16 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது.
சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்க்கு ஆளும் கட்சி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது.