< Back
உலக செய்திகள்
பாகிஸ்தானில் 12 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்..!

கோப்புப்படம்

உலக செய்திகள்

பாகிஸ்தானில் 12 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்..!

தினத்தந்தி
|
14 July 2023 2:50 AM IST

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் சிக்கி 12 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சூய் மற்றும் சோப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர்கள் பயந்து ஓடினர்.

எனினும் இந்த தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பயங்கரவாதிகள் செத்தனர். 12 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததையடுத்து பலுசிஸ்தானில் ஒரே நாளில் நடந்த பயங்கர தாக்குதல் இதுவாகும் என அரசு தெரிவித்தது.

மேலும் செய்திகள்