< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பாகிஸ்தானில் கண்ணிவெடியில் போலீஸ் ஜீப் சிக்கி 3 பேர் உயிரிழப்பு
|7 July 2024 6:01 AM IST
பாலத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்ணிவெடியில் ஜீப் ஏறியதால் வெடித்து சிதறியது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக போலீஸ் நிலையங்கள் மற்றும் ராணுவ முகாம்களை குறிவைத்தும் அவர்கள் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதனால் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை அரசாங்கம் முடுக்கி விட்டுள்ளது.
இந்தநிலையில் மர்தான் நகரில் உள்ள பாலத்தின் மீது போலீஸ் ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பாலத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்ணிவெடியில் ஜீப் ஏறியதால் வெடித்து சிதறியது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். போலீசார் உள்பட 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.