< Back
உலக செய்திகள்
பாகிஸ்தான் ரெயில் விபத்து; 6 அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து ரெயில்வே அதிரடி
உலக செய்திகள்

பாகிஸ்தான் ரெயில் விபத்து; 6 அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து ரெயில்வே அதிரடி

தினத்தந்தி
|
9 Aug 2023 3:29 PM IST

பாகிஸ்தான் ரெயில்வே, அதிகாரிகளின் அலட்சியத்தால் ரெயில் விபத்து நிகழ்ந்ததாக 6 பேரை ரெயில்வே சஸ்பெண்டு செய்துள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த 6-ந் தேதி கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்ற ஹசரா ரெயில் விபத்துக்குள்ளானது. இதில் 10 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 34 பேர் பலியானார்கள். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த ஹசரா ரெயில், பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் கராச்சியிலிருந்து 275 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 15 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் ரெயில்வே, அதிகாரிகளின் அலட்சியத்தால் ரெயில் விபத்து நிகழ்ந்ததாக பொறியாளர் மற்றும் மேலாளர் உட்பட 6 பேரை சஸ்பெண்டு செய்துள்ளது.

மேலும் செய்திகள்