< Back
உலக செய்திகள்
பாகிஸ்தான் வெளியுறவு  மந்திரி பிலாவல் பூட்டோ, வரும் மே 4ம் தேதி இந்தியா வருகை
உலக செய்திகள்

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ, வரும் மே 4ம் தேதி இந்தியா வருகை

தினத்தந்தி
|
20 April 2023 2:47 PM IST

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ வரும் மே 4 ஆம் தேதி இந்தியா வருகை தருகிறார்.

இஸ்லமபாத்,

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, வரும் மே 4ம் தேதி இந்தியா வருகை தருகிறார். கோவாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அரசு உயர் தலைவர் இந்தியா வருவது இதுவே முதன் முறையாகும். 2014ம் ஆண்டு பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் இந்தியா வந்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்