< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இங்கிலாந்தில் 500-ஐ கடந்த குரங்கம்மை பாதிப்பு
|17 Jun 2022 6:44 AM IST
இங்கிலாந்தில் குரங்கம்மை பாதிப்பு 500-ஐ கடந்துள்ளது
லண்டன்:
இங்கிலாந்தில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது .அதன்படி இங்கிலாந்தில் குரங்கம்மை பாதிப்பு 500-ஐ கடந்துள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது.
இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், இங்கிலாந்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளது.