< Back
உலக செய்திகள்
காங்கோவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 400-ஐ கடந்தது
உலக செய்திகள்

காங்கோவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 400-ஐ கடந்தது

தினத்தந்தி
|
8 May 2023 3:16 PM IST

காங்கோவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கலிஹி,

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளது. மேலும், படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது.

அதேவேளை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர், ராணுவம் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகள்