< Back
உலக செய்திகள்
22 லட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் தங்கள் நாட்டில் இருப்பதாக கூறுகிறது பாகிஸ்தான்

image credit: ndtv.com

உலக செய்திகள்

22 லட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் தங்கள் நாட்டில் இருப்பதாக கூறுகிறது பாகிஸ்தான்

தினத்தந்தி
|
9 Jun 2022 5:55 PM IST

பாகிஸ்தானில் 22 லட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் இருப்பதாக தேசிய தரவுத்தள அறிக்கை கூறுகிறது.

கராச்சி,

அண்டை நாடான பாகிஸ்தானில் மார்ச் வரையிலான தேசிய தரவுதள அறிக்கையின்படி, பதிவு செய்யப்பட்ட மக்கள்தொகையின் மொத்த எண்ணிக்கை 18,68,90,601 ஆக உள்ளது. அவர்களில் 18,25,92,000 பேர் முஸ்லிம்கள்.

அதன்படி, பதிவு செய்யப்பட்ட இந்துக்கள் 22,10,566 ஆகவும், கிறிஸ்தவர்கள் 18,73,348 ஆகவும், சீக்கியர்கள் 74,130 ஆகவும், இருப்பதாக தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அறிக்கை கூறுகிறது. மேலும், பௌத்தர்கள் 1,787, சீனர்கள் 1,151, யூதர்கள் 628, ஆப்பிரிக்க மதங்களைப் பின்பற்றுபவர்கள் 1,418 ஆக உள்ளனர்.

பாகிஸ்தானின் பெரும்பான்மையான இந்து மக்கள் சிந்து மாகாணத்தில் குடியிருந்து வருகின்றனர். அங்கு அவர்கள் கலாச்சாரம், மரபுகள் மற்றும் மொழியை முஸ்லீம் குடியிருப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் அடிக்கடி பயங்கரவாதிகளால் துன்புறுத்தப்படுவதாகவும் புகார் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்