< Back
உலக செய்திகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை: சிறை கைதிகள் 1,000 பேரை விடுவித்தது இலங்கை

 Representational - Image

உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை: சிறை கைதிகள் 1,000 பேரை விடுவித்தது இலங்கை

தினத்தந்தி
|
26 Dec 2023 10:38 AM IST

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து சுமார் 1,000 கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

கொழும்பு,

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 1,000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து உத்தரவிட்டுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரணில் விக்ரமசிங்கே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கேவின் உத்தரவையடுத்து, இலங்கை முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 1,004 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இன்று விடுவிக்கப்பட்ட 1,004 பேரில், நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கையர்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்