< Back
உலக செய்திகள்
இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களை ஆக.8 வரை சிறையில் அடைக்க உத்தரவு
உலக செய்திகள்

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களை ஆக.8 வரை சிறையில் அடைக்க உத்தரவு

தினத்தந்தி
|
25 July 2023 4:36 PM IST

9 மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கொழும்பு,

இலங்கை நெடுந்தீவு பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும், 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து அடுத்த மாதம் 18ந் தேதி ராமநாதபுரத்தில் மீனவர் சங்க மாநாடு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களை ஆகஸ்ட் 8ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 9 மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்