< Back
உலக செய்திகள்
வங்காளதேச பிரதமர் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் மாபெரும் பேரணி
உலக செய்திகள்

வங்காளதேச பிரதமர் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் மாபெரும் பேரணி

தினத்தந்தி
|
10 Dec 2022 3:24 PM GMT

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியான வங்காளதேசம் தேசிய கட்சியினர் மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டாக்கா,

வங்காளதேசத்தின் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஷேக் ஹசீனா. இவர் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியான வங்காளதேசம் தேசிய கட்சியினர் கோலாபாக் மைதானத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர்.

ஷேக் ஹசீனா வாக்குகளை திருடிவிட்டதாக குற்றம் சாட்டி கோஷமிட்டனர். மேலும் அவர்கள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும், விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 7 எம்பிக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தனர்.

பாராளுமன்றத்தை கலைத்து, நடுநிலையான காபந்து அரசாங்கம் அமைக்க சுதந்திரமான, நம்பகத்தன்மையுடன் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்களது முக்கிய கோரிக்கை என எதிர்க்கட்சியின் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சியினர் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைநகர் டாக்காவில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும் செய்திகள்