< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
மெக்சிகோவில் ரயில் மோதிய விபத்தில் ஒருவர் பலி,- 22 பேர் படுகாயம்
|8 Jan 2023 6:35 AM IST
இந்த விபத்தில் படுகாயமடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோ நகரில் போட்ரெரோ மற்றும் லா ராசா நிலையங்களுக்கு இடையே ரயில் மோதியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு பெண் உயிரிழந்ததாகவும், 22 பேர் படுகாயமடைந்ததாகவும், அவர்கள் ஏழு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் நகர மேயர் ஷெயின்பாம் கூறினார். இடிபாடுகளுக்குள் சிறிது நேரம் சிக்கிக் கொண்ட ரயில் ஓட்டுனர் ஒருவர் உட்பட 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக மெட்ரோ ரயில்களில் பல்வேறு விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. மே 2021 இல் ஒரு ரயில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பராமரிப்பு குறைபாடுகள் விபத்துக்கான காரணங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.