< Back
உலக செய்திகள்
அமெரிக்கா உயர்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி - ஐந்து பேர் காயம்
உலக செய்திகள்

அமெரிக்கா உயர்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி - ஐந்து பேர் காயம்

தினத்தந்தி
|
5 Jan 2024 3:13 AM IST

காயமடைந்தவர்களில் நான்கு மாணவர்களும் ஒரு பள்ளி நிர்வாகியும் அடங்குவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெர்ரி (அமெரிக்கா),

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான அயோவாவில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அயோவாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது ஒரு இளம்வயது துப்பாக்கி ஏந்திய நபர் சக மாணவர் ஒருவரைக் கொன்றதுடன் மேலும் ஐந்து பேரைக் காயப்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

17 வயதானவர் நடத்திய துப்பாக்கிசூட்டில் காயமடைந்தவர்களில் நான்கு மாணவர்களும் ஒரு பள்ளி நிர்வாகியும் அடங்குவதாக அயோவா குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி இயக்குநர் மிட்ச் மோர்ட்வெட் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்