< Back
உலக செய்திகள்
பூடான் மன்னர் இன்று இந்தியா வருகை

ஏப்ரல் மாதம் பிரதமர் மோடியும் பூடான் மன்னரும் சந்தித்து பேசிய போது எடுத்த படம்

உலக செய்திகள்

பூடான் மன்னர் இன்று இந்தியா வருகை

தினத்தந்தி
|
3 Nov 2023 4:25 AM GMT

கடந்த ஏப்ரல் மாதம் அரசு முறை பயணமாக இந்தியா வந்த பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக், பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேசினார்.

திம்பு,

இந்தியா-பூடான் இடையே நெருங்கிய நட்புறவு நீடித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அரசு முறை பயணமாக பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் இந்தியா வருகை தந்தார். இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஜிக்மே கேசர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் 8 நாள் பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியா வருகிறார். அவரை தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் மூத்த அதிகாரிகள் நேரில் வரவேற்பார்கள் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின்போது பூடான் மன்னர் ஜிக்மே கேசர், பிரதமர் மோடியை சந்தித்து இந்தியா-பூடான் இடையேயான நெருங்கிய உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்