< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஒமைக்ரான்: தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்
|20 Aug 2022 11:26 PM IST
ஒமைக்ரான் தொற்றில் இருந்து மக்களை காக்க தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
ஜெனீவா,
2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக ஓயவில்லை. பல நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஒமைக்ரான் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், பொது இடங்களில் முக கவசம் அணிவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
குறிப்பாக 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், சுகாதார அமைப்புகளின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அரசாங்கங்கள் தயாராக வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.