< Back
உலக செய்திகள்
அல்அக்ஸா பள்ளிவாசலில் அத்துமீறல்: இஸ்ரேலுக்கு ஓமன் அரசு கடும் கண்டனம்
உலக செய்திகள்

அல்அக்ஸா பள்ளிவாசலில் அத்துமீறல்: இஸ்ரேலுக்கு ஓமன் அரசு கடும் கண்டனம்

தினத்தந்தி
|
7 Jun 2024 7:46 AM IST

இஸ்ரேலின் செயல்கள் அனைத்தும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று ஓமன் அரசு தெரிவித்துள்ளது.

மஸ்கட்,

ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்ரேல் அதிகாரிகள், ராணுவத்தினர், நெசட் எனப்படும் குழுவினர் அணிவகுத்து சென்று பள்ளிவாசலை தாக்கி, ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செயல் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த செயல்கள் அனைத்தும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. மேலும் இது புனிதத்தலங்களை மதிக்கும் மரபுகளை அப்பட்டமாக மீறும்செயலை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய அத்துமீறல்களுக்கு ஓமன் அரசின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்