< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஓமன் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பல் - மீட்பு பணியில் இந்திய கடற்படை
|17 July 2024 2:44 PM IST
மாயமான 13 இந்தியர்களை மீட்க ஓமன் சென்றது இந்திய போர்க்கப்பல் மற்றும் விமானம்.
ஏடன்,
ஓமன் அருகே கடலில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் 13 இந்தியர்கள் உள்பட 16 பேர் மாயமானார்கள். எண்ணெய் கப்பல் விபத்து குறித்த தகவல்
உடனடியாக அந்த நாட்டு கடலோர பாதுகாப்புப்படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் கப்பலில் இருந்து மாயமான 16 பேரையும் தேடும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மாயமான இந்தியர்களை மீட்க ஓமன் சென்றது இந்திய போர்க்கப்பல் மற்றும் விமானம். இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் தேஜ் மற்றும் கடல்சார் கண்காணிப்பு விமானம் பி-8ஐ ஆகியவை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. கடலில் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.