< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
போர் ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வடகொரிய ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் உத்தரவு
|8 March 2024 3:11 AM IST
அமெரிக்கா, தென்கொரியாவை அழிக்கும் போர்த்திறனை உருவாக்க வேண்டும் என்று வடகொரிய ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார்.
பியாங்க்யாங்,
கொரிய தீபகற்ப பகுதியில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் மூலம் வடகொரியா அவ்வப்போது பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன.
இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. எனவே தங்களை சீண்டும் நாடுகள் முற்றிலும் அழிக்கப்படும் என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை பொருட்படுத்தாத தென்கொரியா மீண்டும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கியது.
இந்தநிலையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ராணுவ தளத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அழிக்கும் போர் திறன்களை உருவாக்க வேண்டும் என ராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.