< Back
உலக செய்திகள்
கடலில் தொடர் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

கோப்புப்படம்

உலக செய்திகள்

கடலில் தொடர் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

தினத்தந்தி
|
18 March 2024 8:06 PM GMT

கூட்டுப்போர் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலில் தொடர் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது.

பியாங்க்யாங்,

கொரிய தீபகற்ப பகுதியில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் மூலம் வடகொரியா அடிக்கடி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நீண்ட தூர ஏவுகணை சோதனை நடத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது.

இதற்கிடையே தங்களின் பாதுகாப்பு கருதி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதனை தங்கள் மீதான போர் ஒத்திகை என கருதும் வடகொரியா இந்த பயிற்சியை நிறுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் வடகொரியாவின் எச்சரிக்கையையும் மீறி தென்கொரிய கடற்பகுதியில் 11 நாட்கள் கூட்டுப்போர் பயிற்சி நடை பெற்றது. இதனால் ஆத்திரம் அடைந்த வடகொரியா நேற்று தொடர்ச்சியாக 3 ஏவுகணை சோதனை நடத்தியது. இவை வடகொரியாவின் எல்லையில் இருந்து 350 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று ஜப்பான் கடற்பகுதியில் விழுந்தன. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்