< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
கொரோனா அதிகரிப்பு - வட கொரியா தலைநகரில் ஊரடங்கு
|25 Jan 2023 9:28 AM IST
வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சியோல்,
சீனாவில் கடந்த 2019இல் பரவ தொடங்க கொரோனா வைரஸ், உலக நாடுகளை ஒரு வழி செய்துவிட்டது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால், அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மிக மோசமாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக உலகெங்கும் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, இப்போது மெல்ல மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது மக்களிடையே கொரோனா அடுத்த அலை குறித்த பீதியை ஏற்படுத்தி உள்ளது.
அதிலும் குறிப்பாக வடகொரியா நாட்டை கொரோனா வைரஸ் இப்போது பாடாய் படுத்துகிறது. இந்தநிலையில், வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.