< Back
உலக செய்திகள்
வட கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் சோதனை தோல்வி
உலக செய்திகள்

வட கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் சோதனை தோல்வி

தினத்தந்தி
|
31 May 2023 3:16 PM IST

நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வட கொரியா அறிவித்துள்ளது.

சியோல்

நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வட கொரியா அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு மாநில ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி,

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வருவதால், தனது இராணுவ திறன்களை அதிகரிக்க முதல் உளவு செயற்கைக்கோளை ஏற்றிச் சென்ற ராக்கெட் கொரிய தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் அதன் முதல் மற்றும் இரண்டாவது கட்டங்களை பிரித்ததைத் தொடர்ந்து, உந்துதலை இழந்த காரணத்தால், நடுவானில் வெடித்து கடலில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோல்விக்கான காரணத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாகவும் அது கூறியுள்ளது. வட கொரியாவின் முக்கிய விண்வெளி ஏவுதளம் அமைந்துள்ள வடமேற்கு டோங்சாங்-ரி பகுதியில் இருந்து காலை 6:30 மணியளவில் ராக்கெட் ஏவப்பட்டது.

இதனால், தென் கொரியா மற்றும் ஜப்பானின் சில பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், எந்த ஆபத்தும் அல்லது சேதமும் ஏற்படாததால் எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன.

மேலும் செய்திகள்