< Back
உலக செய்திகள்
ராணுவ உளவு செயற்கைகோளை முதல் முறையாக விண்ணில் செலுத்தும் வடகொரியா
உலக செய்திகள்

ராணுவ உளவு செயற்கைகோளை முதல் முறையாக விண்ணில் செலுத்தும் வடகொரியா

தினத்தந்தி
|
19 April 2023 5:46 PM GMT

முதல் முறையாக உளவு செயற்கைகோளை வடகொரியா விண்ணில் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியாங்யாங்,

வடகொரியா-தென் கொரியா நாடுகள் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் மோதலால் கொரிய தீப கற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே தென்கொரியா-அமெரிக்கா இணைந்து போர் பயிற்சி நடத்துவதற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வடகொரியா பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

குறிப்பாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, அணு ஆயுதம் சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்கிறது. இந்த நிலையில் வட கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவ உள்ளது.

இது தொடர்பாக வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைகோளை உருவாக்கி முடித்துள்ளதாகவும் திட்டமிட்டபடி அதை ஏவுவதற்கு அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு கூட்டு போர் பயிற்சியை தொடங்கிய நிலையில் வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைகோளை ஏவ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்