< Back
உலக செய்திகள்
வடகொரியா தொடர்ந்து அடாவடி: தென்கொரியா எல்லை அருகே பீரங்கி குண்டுகளை வீசி சோதனை
உலக செய்திகள்

வடகொரியா தொடர்ந்து அடாவடி: தென்கொரியா எல்லை அருகே பீரங்கி குண்டுகளை வீசி சோதனை

தினத்தந்தி
|
20 Oct 2022 1:39 AM IST

தென்கொரியா எல்லை அருகே பீரங்கி குண்டுகளை வீசி வடகொரியா சோதனை நடத்தி உள்ளது.

சியோல்,

வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் சமீபத்திய வாரங்களில் ஏவுகணை சோதனை மற்றும் ராணுவ பயிற்சியை அதிகரித்துள்ளது.

அந்த வகையில் வடகொரியா கடந்த சில வாரங்களில் ஒரு டஜனுக்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதித்துள்ளது. இவற்றில் ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் அடங்கும். இதனால் கொரியா தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் வடகொரியா நேற்று தென்கொரியா எல்லைக்கு அருகே கடலில் பீரங்கி குண்டுகளை வீசி சோதனை செய்தது.

இரு நாடுகளிடையிலான பதற்றத்தை தணிக்கும் விதமாக கடந்த 2018-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தடுப்பு மண்டலத்தை இலக்காக வைத்து வடகொரியா 100-க்கும் மேறபட்ட பீரங்கி குண்டுகளை வீசியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்கொரியா கூட்டுப்படைகளின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "வடகொரியாவின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்கள் கொரிய தீபகற்பத்தில் மட்டும் இன்றி சர்வதேச சமூகத்திலும் அமைதி மற்றும் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. வடகொரியா தனது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நாங்கள் கடுமையாக வலியுறுத்துகிறோம்" என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்