< Back
உலக செய்திகள்
கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட வடகொரியா
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட வடகொரியா

தினத்தந்தி
|
1 April 2023 11:51 AM IST

வடகொரியவில் கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தென்கொரியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியாங்யாங்,

வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அதிபராக உள்ள கிம் ஜாங் உன் பல்வேறு அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலயில், வடகொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை தென்கொரியா வெளியிட்டுள்ளது.

அதில், சிறுவர்களுக்கு மரண தண்டனை, ஆறு மாத கர்ப்பிணிக்கு மரண தண்டனை போன்ற மிக கொடூரமான மனித உரிமை மீறலில் வடகொரியா விதித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே போல், உயரம் குறைவான பெண்களுக்கு கருப்பைகள் அகற்றப்பட்டதாகவும் பரபரபப்பு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்