< Back
உலக செய்திகள்
உலக நாடுகளின் அமைதியை அழிப்பவர் நான்சி பெலோசி - வடகொரியா கடும் தாக்கு
உலக செய்திகள்

உலக நாடுகளின் அமைதியை அழிப்பவர் நான்சி பெலோசி - வடகொரியா கடும் தாக்கு

தினத்தந்தி
|
6 Aug 2022 12:12 PM IST

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ‘உலக நாடுகளின் அமைதியை அழிப்பவர்’ என்று வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

சியோல்,

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் ஆசிய பயணம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூர், மலேசியா, தைவான், தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு நான்சி அமெரிக்கா புறப்பட்டார்.

இதனிடையே, சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவான் சென்ற நான்சி அந்த பயணத்தை முடித்துக்கொண்டு தென்கொரியா சென்றார்.

அங்கு, தென் கொரியா - வடகொரியாவை பிரிக்கும் கொரிய தீபகற்பத்தின் எல்லைக்கு நான்சி சென்றார். தென்கொரிய அதிகாரிகள், அமெரிக்க பிரதிநிதிகளுடன் வட-தென் கொரிய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு நான்சி பெலோசி சென்றார். இருநாட்டு எல்லைப்பகுதிக்கு நான்சி சென்றதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வடகொரிய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், நான்சி பெலோசி உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மிக மோசமாக அழிப்பவர். தென்கொரியாவில் நான்சியின் நடவடிக்கைகள் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு வடகொரியா எதிர்ப்பு கொள்கையை கொண்டுள்ளதை காட்டுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்