< Back
உலக செய்திகள்

உலக செய்திகள்
விமானம் விழுந்து நொறுங்கியதில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர் குடும்பத்துடன் பலி

4 Oct 2023 1:47 AM IST
விமானம் விழுந்து நொறுங்கியதில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர் குடும்பத்துடன் பலியானார்.
வாஷிங்டன்,
அமெரிக்க வடக்கு மாகாணமான டகோட்டாவின் செனட் சபை உறுப்பினர் டக் லார்சன். இவர் உட்டா மாகாணம் கேன்யன்லாண்ட்ஸ் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானத்தில் புறப்பட்டார். இதில் அவரது மனைவி ஏமி மற்றும் இரு மகன்களும் உடன் சென்றனர்.
அமெரிக்கபெடரஷன் நிறுவனத்துக்கு சொந்தமான பி.ஏ-28 என்ற அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தேசிய விமான போக்குவரத்து வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.